Pages

கசாபுக்கு தூக்கு ஓகே - மோடிக்கு ??


டெல்லி: மும்பையில் 2008ம் ஆண்டு நடந்த பயங்கர தீவிரவாத தாக்குதல் வழக்கில் தனக்கு மும்பை தனி நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனையை உறுதி செய்து மும்பை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து பாகிஸ்தான் தீவிரவாதி முகம்மது அஜ்மல் கசாப் தாக்கல் செய்த அப்பீல் மனு மீதான தீர்ப்பை இன்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. கசாப்பின் அப்பீல் மனுவை டிஸ்மிஸ் செய்த உச்சநீதிமன்றம் அவனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையையும் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் கசாப் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இதில் 2010ம் ஆண்டு மே 6ம் தேதி மும்பை தனி நீதிமன்றம் கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை பின்னர் பாம்பே உயர்நீதிமன்றம் 2011, அக்டோபர் 10ம் தேதி உறுதி செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தான் கசாப். அதில் தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைக் குறைத்து ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு கோரியிருந்தான்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பை அளித்தது உச்சநீதிமன்றம். முன்னதாக கசாப்புக்காக வாதாட உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அமைக்கல் கியூரியான ராஜு ராமச்சந்திரன் உச்சநீதி்மன்றத்தில்நடந்த வாதத்தின்போது கூறுகையில், நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போர்தான் மும்பையில் நடந்த தாக்குதல். ஆனால் அந்த மாபெரும் சதித் திட்டத்தை உருவாக்கிய குழுவில் கசாப் இடம் பெறவில்லை. அதில் அவன் ஒரு அங்கமாக இல்லை என்று கூறியிருந்தார்.
ஆனால் மகாராஷ்டிர மாநில அரசு சார்பில் ஆஜரான கோபால் சுப்ரமணியம் வாதிடுகையில், நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போரில் முக்கியப் பங்காற்றியுள்ளான் கசாப். எனவே அவனை தூக்கில் தொங்க விடுவதே சரியானதாக இருக்க முடியும் என்று வாதிட்டிருந்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பை அளித்த உசத்சநீதிமன்றம், கசாப்பின் மேல் முறையீட்டு மனுவை டிஸ்மிஸ் செய்து, அவனுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகளையும் உறுதி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து அவனைத் தூக்கிலிட நாள் குறிக்கப்படும். இருப்பினும் கசாப் சார்பில் குடியரசுத் தலைவரிடம் கருணை கோரி மனு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கருணை மனு மீது முடிவு வர வருடக்கணக்கில் ஆகும் என்பதால் கசாப் இப்போதைக்கு தூக்கிலிடப்படும் வாய்ப்பு மிக மிகக் குறைவே.
கசாப் தவறு செய்திருந்தால் அவனை தூக்கிலிடுவதை எந்த முஸ்லிமும் எதிர்க்க மாட்டான். அதே சமயம் ... முஸ்லிம்களை துரத்தி துரத்தி கருவறுத்த நரேந்தர மோடியை தண்டிக்க திராணியில்லாத இந்திய அரசு இதற்க்கு பதில் சொல்ல வேண்டும்.
படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்கள் இந்தியர்கள் இல்லையா ?
//கசாபுக்கு பிரியாணி கொடுத்ததுபோதும், உடனே தூக்கிலிடுங்கள்: பாஜக//

பல பேரை கொன்று குவித்த நரபலி மோடிக்கு முதலமைச்சர் பதவி கொடுத்தது போதும், அவனை எப்ப தூக்கிலிடப் போறீங்க..........?????
 


கற்பழிப்புக்கு கடும் தண்டனை


கற்பழிக்கும் மட்டுமின்றி எல்லாக் குற்றங்களுக்கும் கடும் தண்டனை வழங்க வேண்டும் என்பது இஸ்லாமியக் குற்றவியல் சட்டத்தின் முக்கிய அம்சம்.

இது அனைவரின் மனசாட்சிக்கும் சரியாகத் தெரிந்தாலும் காழ்ப்புணர்வு காரணமாக இதை வெளிப்படையாகச் சொல்வதில்லை.
நாட்டையே உலுக்கும் சம்பவங்கள் நடந்தால் மட்டும் இது பற்றி பேசி விட்டு சகஜ நிலை வந்ததும் குற்றவாளிகளுக்கு கருணை காட்டும் வகையில் நடந்து கொள்கின்றனர். அது போல் தேசிய மகளிர் ஆணையத் தலைவிக்கும் நினைவு வந்து கற்பழிப்புக்கு கடும் தண்டனை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தினமணியில் வெளியான செய்தி

புதுதில்லிஜன. 13:  பெண்களிடம் கற்பழிப்பு போன்ற  பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு மிகக் கடுமையான தண்டன வழங்கிட சட்டத்தில் தக்க மாற்றம் கொண்டு வரப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் தேசிய மகளிர் ஆணைய தலைவர் கிரிஜா வியாஸ்.

 மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை புதன்கிழமை சந்தித்து இந்த கோரிக்கையை வைத்தார்.

19 ஆண்டுகளுக்கு முன் 14 வயது ருசிகா என்ற சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எதிரொலியாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவர்கள் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அரசு ஊழியர்களாக இருந்தால் தண்டனையை இன்னும் கடுமையாக்க வேண்டும் என்றும் அவர் அமைச்சரிடம் யோசனை தெரிவித்தார்.

அமைச்சரை சந்தித்த பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பெண்கள் மீதான பாலியல் குற்றச் செயல்கள் தொடர்பான சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவது மிக மிக அவசியம். பாலியல் குற்றச்செயல்கள் தொடர்பான விளக்கத்தை விரிவுபடுத்தி குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும தண்டனையை அதிகரிக்கவேண்டும். தற்போது உள்ள சட்ட விதிகள்படி பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க முடியும். இத்தகைய குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சம் ஆயுள் அல்லது ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்து சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப் படவேண்டும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் அரசு ஊழியர்களாக இருந்தால் அவர்களுக்கு தண்டனையை மேலும் கடுமையாக்க வழி செய்தாகவேண்டும் என்று அமைச்சரிடம் வலியுறுத்தினேன்.

பாலியல் வன்முறை தொடர்பான சட்டங்கள் குறித்து மத்திய உள்துறைச் செயலர் தலைமையில் மத்தியமாநில அரசுகளின் காவல்துறை  அமைச்சகங்களின் ஒருங்கிணைப்புக் குழு ஆராய்ந்து வருகிறது என்று சிதம்பரம் உறுதி அளித்தார். பெரும்பாலான கற்பழிப்பு வழக்குகளில் புகாரே பதிவு செய்யப்படுவதில்லை என்பது வேதனை தரும் விஷயம் என்றார் வியாஸ்.


onlinepj.com

தேவை - இஸ்லாமியக் குற்றவியல்



திருந்திய பெண்ணை நபி தண்டித்தது சரியா ?


விபச்சாரம் செய்த பின் அதை தவறு என்று உணர்ந்துவிட்ட பெண்ணுக்கு நபி (ஸல்அவர்கள் ஏன் தண்டனை வழங்கினார்கள்? 

பதில்:

நீங்கள் குறிப்பிடும் சம்பவம் முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புரைதா பின் அல்ஹசீப் (ரலிஅவர்கள் கூறுகிறார்கள் :
"ஃகாமிதிய்யாகுலத்தைச் சேர்ந்த ஒரு பெண் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்களிடம்வந்து, "அல்லாஹ்வின் தூதரேநான் விபச்சாரம் செய்து விட்டேன். (உரிய தண்டனையை நிறைவேற்றி)என்னைத் தூய்மைப்படுத்துங்கள்'' என்று கூறினார்அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் அப்பெண்ணைத் திருப்பியனுப்பி விட்டார்கள்அப்பெண் மறுநாள் (வந்து), "அல்லாஹ்வின் தூதரேஏன்என்னைத் திருப்பியனுப்புகிறீர்கள்மாஇஸ் அவர்களைத் திருப்பி அனுப்பியதைப் போன்று என்னையும் தாங்கள் திருப்பியனுப்புகிறீர்கள் போலும்அல்லாஹ்வின் மீதாணையாகநான் (தகாதஉறவில் ஈடுபட்டுகர்ப்பமுற்றுள்ளேன்'' என்று கூறினார்அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள், "இல்லைநீ சென்று குழந்தை பெற்றெடு (பிறகு திரும்பி வா)'' என்று சொன்னார்கள்

குழந்தைபெற்றெடுத்த பின் அந்தப் பெண் ஒரு துணியில் குழந்தையை எடுத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்களிடம் வந்து, "இது நான் பெற்றெடுத்த குழந்தை'' என்று கூறினார்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள், "நீ சென்று குழந்தைக்குப் பாலூட்டுபால்குடி மறந்த பின் திரும்பி வா'' என்றார்கள்பால்குடி மறக்கடித்த பின் அப்பெண் அச்சிறுவனுடன் வந்தார்அவனதுகையில் ரொட்டித் துண்டு ஒன்று இருந்ததுஅப்பெண், "அல்லாஹ்வின் தூதரேஇவனுக்குப் பால்குடி மறக்கடித்து விட்டேன்இப்போது உணவு உட்கொள்கிறான்'' என்று கூறினார்அல்லாஹ்வின்தூதர் (ஸல்அவர்கள்அச்சிறுவனை முஸ்லிம்களில் ஒருவரிடம் ஒப்படைத்தார்கள்பிறகு அந்தப் பெண்ணுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள்ஆகவே,அவருக்காக நெஞ்சளவு குழி தோண்டப்பட்டது. (பின்னர் அக்குழிக்குள் அப்பெண்ணை நிறுத்திய பின்மக்களுக்குக் கட்டளையிடஅவருக்குக் கல்லெறி தண்டனையை மக்கள்நிறைவேற்றினார்கள்.
நூல் : முஸ்லிம் (3500)

தவறு செய்தவர் திருந்தி விட்டால் அவரை அல்லாஹ் மன்னிப்பான் என்று இஸ்லாம் சொல்கிறது. ஒருவர் திருந்தி விட்டாரா இல்லையா என்பது அவரது உள்ளத்துக்கும் இறைவனுக்கும் மட்டுமே தெரிந்த விஷயமாகும்.

அது போல் ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் தவறு செய்து அதில் இருந்து திருந்தி விட்டதாகக் கூறுகிறான். அவனால் பாதிக்கப்பட்ட மனிதனும் அதை நம்பி ஏற்றுக் கொண்டு அவனை மன்னித்தால் அதிலும் இஸ்லாம் தலையிடாது.

ஆனால் உலகில் உள்ள எல்லா அரசுகளும் சட்டங்கள் வகுத்துள்ளன. குற்றங்கள் குறைய வேண்டும் என்பதற்காகவும் அநீதி இழைக்கப்பட்டவர்கள் மனநிறைவு அடைவதற்காகவும் தான் சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டங்கள் ஒருவன் குற்றம் இழைத்தானா இல்லையா என்று தான் பார்க்குமே தவிர குற்றம் செய்தவன் திருந்தினானா இல்லயா என்று பார்ப்பதில்லை. பார்க்கவும் கூடாது.

அப்படிப் பார்த்தால் சட்டங்கள் வகுக்கப்பட்டதற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடும். குற்றம் செய்த ஒவ்வொருவனும் தனது குற்றம் நிரூபிக்கப்படும் போது நான் குற்றம் செய்தது உண்மை தான். ஆனால் நான் இப்போது திருந்தி விட்டேன் எனக் கூறி தப்பித்து விடுவான். ஒருவனைக் கூட எந்தக் குற்றத்துக்கும் தண்டிக்க முடியாமல் போய்விடும்.
இது தான் எல்லா உலக நாடுகளும் கடைப்பிடிக்கும் நியதியாகும். அனைத்து மக்களின் நன்மை கருதி உருவாக்கப்பட்ட சட்டத்தை ஒரு அதிபர் மன்னித்து விட முடியாது.

நபிகள் நாயகத்துக்குத் தனிப்பட்ட முறையில் அநீதி இழைத்தவர்களை அவர்கள் பல முறை மன்னித்து இருக்கிறார்கள். இது அவர்கள் சம்மந்தப்பட்ட பிரச்சனை அல்ல. சட்டத்தை நிலை நாட்டும் பிரச்சனையாகும்.

எனவே சட்டத்தின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட குற்றத்துக்கு தண்டனையை வழங்குவது தான் ஆட்சி செய்பவரின் கடமையாகும்.
அதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் செய்தார்கள்.

சட்டத்தை நிலை நாட்டுவோருக்கு இது போன்ற நெஞ்சுரம் இருக்க வேண்டும். பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு பலரைக் கொன்று குவித்தது நிரூபிக்கப்பட்டு அவர்களுக்கு தண்டனை அளிக்கப்படும் போது அதை எதிர்த்து கூட்டம் போட்டு கொடி பிடித்தால் சட்டம் வளைகிறது. சட்டம் இயற்றும் சட்டசபைகளும் வளைகின்றன. நீதிமன்றங்களும் வளைகின்றன. இது போன்ற நிலையையே பார்த்துப் பழகியதால் அந்த நண்பர் இப்படி கேட்டுள்ளார்.

இஸ்லாமிய ஆட்சியால் பயன் இல்லை என்பது சரியா ?


இஸ்லாமிய ஆட்சி அமைந்தால் குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறு பலன் இல்லை என்று கூறப்படுகின்றதே. இது சரியா?

பதில் :

இஸ்லாமிய ஆட்சி என்ற பெயரில் உள்ள சில நாடுகளைப் பார்த்து விட்டு இந்தக் கருத்துக்கு அவர்கள் வந்திருக்கலாம்.

நபி (ஸல்) அவர்கள் உருவாக்கிய இஸ்லாமிய ஆட்சியால் ஏற்பட்ட நன்மைகள் என்னென்ன என்று யோசித்தால் இக்கேள்விக்குரிய பதிலை அறிந்து கொள்ளலாம்.
ஒரு நாட்டில் மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு  இருந்தால் அதுவே நல்லாட்சி. மேலும் மக்களுக்குக் கேடு தரும் எந்த அம்சத்தையும் நல்லாட்சி புரிபவர்கள் நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டார்கள். இதற்காகத் தான் மக்கள் ஆட்சியாளர்களைச் சார்ந்திருக்கின்றார்கள். இந்த அமைதியை ஏற்படுத்துவதற்காகத் தான் குற்றவியல் சட்டங்களை இஸ்லாம் வழிகாட்டியிருக்கின்றது. நபி (ஸல்) அவர்களின் ஆட்சி முறையால் இத்தகைய நன்மை ஏற்பட்டது.

மேலும் மக்களுக்கிடையே நடக்கும் பிரச்சனைகளில் நியாயமான தீர்ப்புகளை நபி (ஸல்) அவர்கள் வழங்கினார்கள். எனவே ஒருவன் அநியாயமாகப் பாதிக்கப்படும் சூழல் தடுக்கப்பட்டது. உரிமையுள்ளவர்களுக்கு அவர்களின் உரிமை வழங்கப்பட்டது. அக்கிரமங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இந்த நன்மையும் நபி (ஸல்) அவர்களின் ஆட்சியில் ஏற்பட்டது.

மேலும் நபி (ஸல்) அவர்களின் ஆட்சியில் ஆள்பவர்கள் நீதி நேர்மையைக் கடைபிடித்து ஆட்சி செய்ததால் மக்களின் பொருளாதார நிலையும் உயர்ந்தது. செல்வந்தர்களிடமிருந்து முறையாக ஸகாத் வசூலிக்கப்பட்டது. அது உரியவர்களுக்கு அதாவது ஏழை எளியவர்களுக்கு முறையே வழங்கப்பட்டது. இத்திட்டத்தால் நாட்டில் அனைத்து மக்களும் சிறப்பான முறையில் வாழும் மிகப் பெரிய நன்மை ஏற்பட்டது. நபி (ஸல்) அவர்களின் ஆட்சியால் இந்த நன்மையும் ஏற்பட்டது.

இது போன்ற நன்மைகள் நபியவர்களின் ஆட்சியால் ஏற்பட்டது. நபியவர்களின் ஆட்சியில் இப்படிப்பட்ட நன்மைகள் ஏற்படுவதற்கு திருமறைக்குர்ஆனே முக்கிய காரணமாகும். இறைவனுடைய உத்தரவை சிறிதும் புறக்கணிக்காமல் அவனுடைய திருப்தியை மட்டும் நாடி செயல்பட்டதால் தான் இப்படிப்பட்ட ஆட்சியை நபி (ஸல்) அவர்களால் உருவாக்க முடிந்தது.

இப்படிப்பட்ட ஆட்சி உருவாக வேண்டுமென்றால் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முழுமையாக கட்டுப்படும் மக்களை நபி (ஸல்) அவர்கள் உருவாக்கியது போல் நாமும் உருவாக்க முயற்சிக்க வேண்டும். குர்ஆன் ஹதீஸ் வழியில் தலைவைர்களும் தொண்டர்களும் பயணிக்க வேண்டும். இவ்விரண்டை மக்களிடையே கொண்டு சென்று மக்களிடம் மாற்றம் ஏற்பட்டால் தானாக இப்படிப்பட்ட நல்லாட்சி மலர்ந்துவிடும்.

எனவே உண்மையான இஸ்லாமிய ஆட்சி வர வேண்டும் என்றால் நாம் முதலில் செய்ய வேண்டிய வேலை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நாம் வாழ வேண்டும். இவ்வாறு பிறர் வாழ்வதற்குப் பிரச்சாரம் செய்ய வேண்டும். குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமான செயல்களை மக்கள் செய்து கொண்டிருந்தால் தயவுதாட்சனையின்றி அச்செயல்களைக் கண்டிக்க வேண்டும். மாற்று மத மக்களிடம் இஸ்லாத்தை எடுத்துக்கூறி அவர்கள் இஸ்லாத்தை ஏற்க பாடுபட வேண்டும்.

இதைச் செய்யாமல் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்குவோம் என்று வெறுமனே கோசம் மட்டும் எழுப்பிக் கொண்டிருந்தால் அதனால் ஒரு போதும் இஸ்லாமிய ஆட்சி உருவாகாது. அப்படியே உருவானாலும் அது உண்மையான இஸ்லாமிய ஆட்சியாக இருக்காது.

இஸ்லாமிய ஆட்சி என்ற பெயரைத் தவிர்த்து ஆள்பவர்களிடமோ நாட்டு மக்களிடமோ இஸ்லாம் இருக்காது. உதாரணமான இன்றைக்கு இஸ்லாமிய நாடுகள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் பல நாடுகள் இருக்கின்றன. அந்நாட்டை ஆள்பவர்களிடமோ மக்களிடமோ உண்மையான இஸ்லாம் இல்லை. 

எனவே இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களைக் கூட இவர்களால் நாட்டில் செயல்படுத்த முடியவில்லை.இன்றைக்கு இஸ்லாமிய ஆட்சி வேண்டும் என கொக்கரிப்பவர்கள் மக்களைச் சீர்திருத்தி உண்மையான இஸ்லாமியக் கொள்கையைப் பரப்பும் பணியில் ஈடுபடுவதில்லை. இஸ்லாத்துக்குப் புறம்பான இணைவைப்பு மூடநம்பிக்கை பித்அத்துகள் மத்ஹபுகள் ஆகியவற்றை கண்டு கொள்வதில்லை. வெறுமனே இவ்வாறு கோஷம் போட்டுத் திரிவதைத் தவிர்த்து இவர்களின் பணி வேறொன்றுமில்லை. 

இவர்களால் இஸ்லாமிய ஆட்சியை எப்படி உருவாக்க முடியும்ஒரு பேச்சுக்கு இவர்கள் உருவாக்கினாலும் அது உண்மையான இஸ்லாமிய ஆட்சியாக இருக்கவே இருக்காது. இஸ்லாமிய ஆட்சி என்ற பெயர் மட்டுமே இருக்கும். மற்ற நாடுகளில் உள்ளதைப் போன்று அல்லது அதை விட மோசமான ஆட்சியைத் தான் இவர்களால் உருவாக்க முடியும்.

உண்மையான இஸ்லாமிய ஆட்சியை குர்ஆன் ஹதீஸை கொள்கையாகக் கொண்டு செயல்படுபவர்களாலேயே ஏற்படுத்த முடியும்.

- பி.ஜெ 

இந்தியாவிலும் குற்றவியல் சட்டத் திட்டங்களை அமல் செய்ய வேண்டியது தானே?


சொத்து, திருமணம், விவாகரத்து போன்ற விவகாரங்களில் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தங்களுக்கெனத் தனியான சட்டங்கள் வைத்திருக்கும் போது, குற்றவியல் சட்டங்களிலும் இஸ்லாமியர்கள் இஸ்லாமிய சட்டத் திட்டங்களை அமல் செய்ய வேண்டியது தானே?
(உதாரணத்திற்கு திருடினால் கையை வெட்டுவது போன்றது..)

டாக்டர் ஜாஹிர் நாயக் அவர்களிடம் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள்  கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் ..




1. இஸ்லாமிய தனியார் சட்டம்:

தனியார்சட்டம் என்பது ஒரு தனிப்பட்ட மனிதருக்கும், அவருக்கு நெருங்கிய பந்தம் உடையவர்களுக்கும் - இடையில் ஏற்படும் பிரச்னைகளை தீர்ப்பதற்கு ஏற்படுத்தப்பட்டதாகும். உதாரணத்திற்கு திருமணம் சம்பந்தப்பட்ட சட்டங்கள், விவாகரத்து சம்பந்தப்பட்ட சட்டங்கள், சொத்து விவகாரங்கள் போன்றவை. மேற்படி சட்டங்கள் ஒரு குறிப்பிட்ட குழுவினாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் இருக்க வேண்டும். மேற்படி சட்டங்கள் முழு சமுதாயத்தையும் நேரடியாக பாதிக்கக் கூடிய செயலாகவோ அல்லது குற்றவியல் சம்பந்தப் பட்டதாகவோ இருக்கக் கூடாது.

2. இந்தியா ஒரு மதச்சார்பற்ற, ஜனநாயக நாடு.

எந்த ஒரு நாடானாலும், தனியார் சட்டம் என்பது, ஒவ்வொரு சமுதாய மக்களுக்கிடையேயும், ஒவ்வொரு குழுவுக்கும் இடையேயும் வேறுபடலாம். இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடாக இருப்பதால் - ஒவ்வொரு சமுதாயமும் - அவர்கள் விரும்பும் பட்சத்தில் - அவர்கள் விரும்பும் தனியார் சட்டத்தை பின்பற்ற - இந்தியாவின் சிவில் உரிமைச் சட்டம் அனுமதியளித்துள்ளது.

3. இஸ்லாமிய தனியார் சட்டமே மிகச் சிறந்த தனியார் சட்டம்:

உலகத்தில் உள்ள விதவிதமான தனியார் சட்டங்களில் - மிகச் சிறந்ததும், பலனைத் தரக்கூடியதுமான தனியார் சட்டம் - இஸ்லாமிய தனியார் சட்டமே என்கிற நம்பிக்கை இஸலாமியர்களிடையே உள்ளது. இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் - இஸ்லாமிய தனியார் சட்டத்தை பின்பற்றுவதற்கு, அவர்கள் இஸ்லாத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையும் காரணமாகும்.

4. குற்றவியல் சட்டம்:

குற்றவியல் சட்டம் என்பது சமுதாயத்தை நேரடியாகப் பாதிக்கக் கூடிய ஒரு செயல் அல்லது குற்றம் சம்பந்தப்பட்டது ஆகும். உதாரணத்திற்கு கொலை, கொள்ளை, வல்லுறவு(கற்பழிப்பு) போன்றவையாகும்.

5. குற்றவியல் சட்டம் என்பது அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும்.

எந்த நாடாக இருந்தாலும், குற்றவியல் சட்டமானது, வித்தியாசமான பல சமுதாயத்திற்கு பலவிதமான சட்டம் என்னும் தனியார் சட்டம் போலில்லாமல், எந்த சமுதாயமாக இருந்தாலும் அல்லது
சமுதாயத்தின் எந்த குழுவாக இருந்தாலும் குற்றவியல் சட்டம் என்பது சமுதாயத்தில் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு மனிதன் திருடினால் அவனது கையை வெட்டுமாறு பணிக்கிறது இஸ்லாமிய குற்றவியல் சட்டம். ஆனால் மேற்படி சட்டம் இந்து குற்றவியல் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. உதாரணத்திற்கு சமுதாயத்தில் உள்ள ஒரு இந்து, ஒரு இஸ்லாமியரிடம் திருடி விட்டார் எனில், அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய தண்டனை என்ன?. இஸ்லாமியர் இஸ்லாமிய குற்றவியல் சட்டப்படி திருடியவரின் கை வெட்டப்பட வேண்டும் என்பதை
விரும்புகிறார் எனில், இந்து குற்றவியல் சட்டம் அதை அனுமதிப்பதில்லை.

6. இந்தியாவில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்களை உட்படுத்தாமல், இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மாத்திரம், தனிப்பட்ட முறையில் இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை பின்பற்ற முடியாது.

ஒரு முஸ்ஸிம் அவரைப் பொருத்த மட்டில், அவர் செய்துவிட்ட குற்றத்திற்கு தண்டனையாக - இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தின்படி, தண்டனை பெற விரும்புவார் எனில் - அது நடைமுறையில் சாத்தியக் கூறானதல்ல. 

ஒரு முஸ்லிம் கொள்ளையடித்து விட்டதாக குற்றம் சாட்டுப்படுவார் எனில் - அந்த குற்றச்சாட்டின் சாட்சி முஸ்லிம் அல்லாதவராக இருப்பார் எனில், முஸ்லிமும், முஸ்லிம் அல்லாதவரும், தத்தம் குற்றவியல் சட்டத்தை பயன்படுத்த விரும்பினார்கள் எனில் - இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தின் படி பொய் சாட்சியம் சொன்னவருக்கு 80 கசையடிகள் கொடுக்கப்பட
வேண்டும். 

அதே நேரத்தில் இந்திய குற்றவியல் சட்டப்படி பொய் சாட்சி சொல்பவர் தண்டனையிலிருந்து எளிதாக தப்பிவிட முடியும். இவ்வாறாக ஒரு முஸ்லிமும் - ஒரு முஸ்லிம் அல்லாதவரும் தத்தம் குற்றவியல் சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பினால் - முஸ்லிம் அல்லாத ஒருவர் - குற்றம் செய்யாத முஸ்லிம் ஒருவரை, எளிதாக குற்றவாளி ஆக்கிவிட முடியும். எப்படி இருப்பினும், இரண்டு பேருமே இந்திய குற்றவியல் சட்டத்தை பின்பற்றுவார்கள் எனில் - இந்திய  குற்றவியல் சட்டத்தின்படி கொள்ளை அடிப்பவருக்கும், பொய்சாட்சியம் சொல்பவருக்கும் தண்டனை அத்தனை கடுமையானதாக இல்லை. 

இவ்வாறு கடுமையான தண்டனை இல்லாத சட்டம் கொள்ளை அடிப்பவனை தங்களது சுய லாபத்திற்காக மேலும் கொள்ளை அடிக்கச் செய்யத்தூண்டவும், பொய்சாட்சியம் சொல்பவனை மேலும் பொய்சாட்சியம் சொல்ல வைக்கவும் காரணமாக  அமைந்துள்ளது.

இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள், இந்தியர்கள் அனைவர் மீதும் இஸ்லாமிய குற்றவியல் சட்டம் நடைமுறைபடுத்தப் படுவதைத்தான் விரும்புவார்கள்.

முஸ்லிம்கள் என்கிற முறையில் இந்தியாவிலும் இஸ்லாமிய குற்றவியல் சட்டம் நடைமுறைபடுத்தப் படுவதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். ஏனெனில் - திருடினால் கையை வெட்டுவது என்கிற  இஸ்லாமிய குற்றவியல் சட்டம் - கண்டிப்பாக திருட்டின் சதவீதத்தை குறைக்கும். அதுபோல பொய் சாட்சியம் சொல்பவருக்கு 80 கசையடிகள் என்கிற சட்டம் - ஒரு மனிதன் பொய் சாட்சியம் சொல்வதை கண்டிப்பாக தடுக்கும்.

8. இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப் படுவதற்கு மிகவும் எனிதானது:

இஸ்லாம் ஒரு குற்றத்திற்கு தண்டனை வழங்குவதோடு நின்று விடாமல், அந்த குற்றம் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான வழிமுறைகளையும் காட்டித் தருகிறது. உதாரணத்திற்கு திருடினால்
கையை வெட்டுவது, வல்லுறவு கொள்பவனுக்கு மரண தண்டனை போன்றவை, அதுபோன்ற குற்றங்களை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைகிறது. அதுபோன்ற குற்றங்களை செய்ய நினைப்பவனை - பல நூறுமுறை - சிந்திக்க வைக்கிறது இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள்.

இவ்வாறு இந்தியாவில் குற்றங்கள் குறைக்கப்பட வேண்டும் அல்லது குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என்று எண்ணிணால் -இந்தியாவில் பொது இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை - நடைமுறை படுத்துவதே சிறந்த வழிமுறையாகும்.

உடனடி தேவை இஸ்லாமிய குற்றவியல் சட்டமே!

செய்தி : ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்துச்சென்ற திருடனை காட்டிக்கொடுத்த அப்பாவி ஆட்டோ டிரைவர் ஜாமீனில் வெளிவந்த அந்த திருடனால் நடுரோட்டில் வைத்து கண்ட துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

செய்தி  : அண்ணியை கற்பழித்து கொடூரமான முறையில் கொலை செய்தவன் பல ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு விடுதலை அவனை தொடர்ந்து சிறையில் வைக்க எந்த முகாந்திரமும் இல்லை மேலும் தொடர்ந்து  சிறையில் வைக்க சட்டத்தில் இடமில்லை என நீதிபதிகள் அறிவிப்பு ஏனென்றால் கற்பழித்த போது  அந்த கயவனுக்கு வயது 17 நான்கு மாதமாம் அதனால் அவன் சிறுவன் என  நீதிபதிகள் தெரிவித்து விடுதலை செய்து தீர்பளித்தனர்.

மேலே குறிப்பிட்ட செய்திகள் இந்தியாவில் அணைத்து மாநிலங்களிலும் தொடர்ந்து நிகழ்த்து வருகிறது அவைகள் சில உதாரணங்கள் மட்டுமே இதுபோன்ற அத்துமீறும் செயல் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கு இதற்க்கெல்லாம் ஒரே காரணம் இந்திய குற்றவியல் சட்டம் மிகவும் பலகீனமாக இருப்பதே இந்திய குற்றவியல் சட்டத்தை இயற்றிய அறிவு ஜீவிகள் மனிதர்கள் என்கிற வகையில் தங்களால் முடிந்த அளவு சட்டத்தை இயற்றி உள்ளனர்.

இவர்கள் இயற்றிய சட்டம் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக அவர்களுக்கு சாதகாமாகவே உள்ளது சட்டத்தை இயற்றிய இவர்கள் பாதிக்கப்பட்டவர்களை குறித்து கவனத்தில் கொள்ள மறந்துவிட்டனர் என்றே சொல்லலாம் காரணம் சாதாரண திருட்டிலிருந்து  கடுமையான குற்றச் செயலான கொலை கொள்ளை கற்பழிப்பு வரை செய்தவன் இன்று சர்வசாதரணமாக வெளியில் நடமாடுவதை நாம் கண்முன்னே காண்கிறோம்.

இன்று நமது நாட்டில் உள்ள சிறைச்சாலைகள் எவ்வாறு இருக்கு என்று  சொல்லி தெரியவேண்டியதில்லை அதற்காக நாம் அங்கே போய் பார்க்கவேண்டிய அவசியமும் இல்லை காரணம் தினமும் நாம் நாளிதழ்களிலும் காட்சிஊடகங்களிலும் பார்த்தாலே விளங்கும் பத்துமுறை  திருடியவன் பதினோராவது முறையாக கைது ஐந்து முறை பெண்களிடம் சில்மிஷம் செய்தவன் மீண்டும் கைது என்று தினமும் படிக்கிறோம் அதற்கு காரணம் நமது நாட்டிலுள்ள சிறைச்சாலைகள்தான் மணி அடிச்சா சோறு மாமியாரு வீடு என்று குற்றவாளிகளால் செல்லமாக அழைக்கப்படும் நிலையில்தான் இன்று நாட்டிலுள்ள சிறைச்சாலைகள் உள்ளன. 

உண்மையில் எந்த ஒரு மாமியார் வீட்டிலும் நேரத்திற்கு சாப்பாடு கிடைப்பதில்லை வேண்டுமென்றால் திருமணமான சில நாட்கள் அவ்வாறு இருந்திருக்கும் ஆனால் நாட்கள் செல்லச்செல்ல அந்த சில நாட்களும் பல நாட்க்களாக மாறிப்போகும் ஆனால் இன்று நாட்டிலுள்ள சிறச்சாலைகளின் நிலை அவ்வாராக இல்லை சிறைச்சாலையா அல்லது உல்லாச விடுதியா என்று கேட்க்கும் அளவிற்கு வாரத்தில் மூன்று நாள் கோழி இறைச்சி பலமுறை சினிமா தலைக்கு என்னை சோப்பு சீப்பு இப்படி ஒரு மனிதனுக்கு தேவையான அனைத்தையும் அரசு செய்து கொடுக்கிறது.
இதுவரை ஒன்று மட்டமே இல்லாமல் இருந்தது ஆனால் இப்போது அந்த தேவையும் அரசின் பரிசீலனையில் உள்ளது சிறைக்கைதிகளுக்கு தங்களின் மனைவிமாருடன் தனித்திருக்க அனுமதியில்லை இப்போது அந்த தேவையும் பூர்த்திசெய்ய அரசு பரீசிலித்து வருகிறது மாதத்தில் இரண்டுமுறை அல்லது ஒருமுறை இந்த அனுமதி கூடிய விரைவில் சட்டம் இயற்றலாம் அவ்வாறு சட்டம் அமுலில் வந்தால் இனி சிறைச்சாலை நிஜமாகவே அணைத்து நிலையிலும் அது மாமியார் வீடாகிப்போகும் என்பதில் சந்தேகம் இல்லை.

இப்படி தண்டனை வழங்கக்கூடிய சிறைச்சாலை குற்றவாளிகளின் சொர்க்கமாகிப்போனது இதில் மிகவும் வேதனைப்பட வேண்டிய விசயம் என்ன தெரியுமா நமது விரலைக்கொண்டு நமது கண்ணையே குத்திக்கொல்வதுபோல நமது வரிப்பணத்தை வசூலித்து நமக்கு நட்டத்தை ஏற்ப்படுத்திய ஒருவனுக்கு சுகபோக வாழ்க்கை இதை பாதிக்கப்பட்ட ஒருவன் பார்த்தல் அவன் மனநிலை என்னவாக இருக்கும் என் குடும்பத்தை அழித்த இவனுக்கு நமது சிலவில் சுகபோக வாழ்க்கையா என்று மனம் வெறுத்து அவனையும் குற்றவாளியக்கியதுதான் இந்த அரசாங்கத்தின் சாதனை.

 உலகத்திலேயே குற்றச்செயல்கள் மிக குறைவாக நிகழ்வது அரபுநாடுகளில்தான் அதுவும் குறிப்பாக இஸ்லாமிய சட்டத்தை கடுமையாக கடைபிடிக்கும் சௌதி அரேபியாவில்தான் மிகமிக குறைவாக உள்ளது என்று சௌதி அரசாங்கம் சொல்லவில்லை ஐநாசபை புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது இப்படி உலகமே திரும்பிப்பார்க்கும் உன்னத சட்டத்தை இஸ்லாம் மக்களுக்கு வழங்கியிருந்தாலும் அது இஸ்லாமிய சட்டம் என்ற ஒரு காரணத்தால் இந்த அறிவாளிகள் என்று சொல்லிக்கொள்ளும் மூடர்கள் இத்தகைய அருமையான சட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் அப்படியே அரசியல்வாதிகள் இந்தியா குற்றவியல் சட்டத்தை மாற்றி அமைக்க முயன்றாலும் மனித உரிமை ஆர்வளர்கள் என்ற போர்வையில் நடமாடும் சில புல்லுருவிகளால் அது சாத்தியமில்லாமலே போகிறது இந்தியாவின் துணை பிரதமராக இருந்த போது எல்கே அத்வானி கற்பலிப்பவனுக்கு அரபுநாட்டுச் சட்டத்தின் அடிப்படையில் தண்டனை வழங்க வேண்டும் என்றார் ஷய்த்தான் வாயிலிருந்து வந்த ஆயத்துல் குர்ஷி போல.  

ஆனால் இந்த மனித உரிமை ஆர்வளர்கள் இஸ்லாமிய சட்டத்தை அமல் படுத்துவதர்க்கு  பொருந்தாத ஒரு காரணத்தையும் சொல்வார்கள் இஸ்லாமிய சட்டம் என்பது மிகவும் கொடூரமான சட்டம் அது மனித குலத்திற்கு நன்மையை தராது அதற்கு பதிலாக குற்றவாளிகளுக்கு திருந்த ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று இவர்கள்தான் மனிதகுல காவலர்கள் போல உளறிக்கொட்டுகிறார்கள் இவர்கள் திருத்திய லச்சனத்தை நாம் நாள் தோறும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம் இவர்கள் திருத்தியதனால்  நாட்டில் உள்ள குற்றங்கள் குறைந்துள்ளதா என்றால் இல்லை மாறாக வருடாவருடம் மத்திய அரசின் புள்ளிவிபர கணக்குப்படி குற்றங்கள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கு.

கடந்த  சில நாட்களுக்கு முன்பு அணைத்து ஊடகங்களுக்கும் வெரும் வாய்க்கு அவலாகிப்போன செய்தி ஆப்கானில் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை விதித்தால் இந்தியாவிலுள்ள அணைத்து அறிவு ஜீவிகளின் கண்டனத்திற்கு ஆளாகி உள்ளது ஒரு பெண் தனது கணவனுக்கு மாறு செய்துள்ளாள் வேறொருவனோடு கள்ளத்தொடர்பு வைத்திருந்தால் அவளை ஆதாரத்துடன் நிருபிக்கப்பட்டு அவளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு அது பொதுமக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது இதைதான் இவர்கள் விமர்சிக்கிறார்கள் கொடூர தண்டனை என்கிறார்கள்.

இதற்குப்போய் இப்படி ஒரு கொடூர தண்டனை தேவையா என்று ஓலமிடுகிறார்கள் அதற்கு காரணம் இதுபோன்ற படுபாதக செயலை இந்தியா போன்ற நாடுகளில் பார்த்துப்பார்த்து பழகிப்போய் விட்டது கொலை கொள்ளை கற்பழிப்பு ஆள்க்கடத்தல் பேங்க் ராப்ரி போன்ற சமூக விரோதச் செயல் இவர்களுக்கு சர்வசாதாரணமாகிவிட்டது அதனால்தான் குற்றத்திற்கான தண்டனை வழங்கும்போதும் அதை நிறைவேற்றும்போதும் பொங்கி எழுகிறார்கள் இந்த சமூக ஆர்வளர்கள்! ஆனால் இதுபோன்ற தண்டனை ஒவ்வெரு நாளும் தனி நபர்களால் கொடுக்கப் பட்டுக்கொண்டே வருகிறது என்பதை நாட்டில் நடக்கும் செயல்கள் மூலம் சாதாரண அறிவுள்ள ஒருவன் கூட விளங்கிக் கொள்ளலாம் ஒவ்வொரு நாளும் கள்ளக்காதல் தொடர்பான கொலைகள் மூலமாக.

இரவில் நன்றாகத்தான் படுக்கைக்கு சென்றார் ஆனால் காலையில் எழும்பவில்லை பினமாகிப்போனார் என்பார்கள் அல்லது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்வாள் அதேமாதிரி அவனும் யாருடனாவது கள்ளத்தொடர்பு வைத்திருப்பான் அதை மனைவி பார்த்து கண்டிப்பால் உடனே அவளை கொலை செய்துவிட்டு ஸ்டவ் வெடித்து தனது மனைவி செத்துவிட்டால் என்று நாடகம் ஆடுவான் இப்படி தனி ஒருவனை கொலைகாரனாக அவளை கொலைகாரியாக மாற்றாமல் இஸ்லாம் ஒரு அரசாங்கம் அதை செய்யச் சொல்கிறது அப்படி சிலருக்கு மரணதண்டனை கொடுத்து அதை மீடியாக்கள் மூலம் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டினால் பிறகு எப்படி இன்னொருவன் மீண்டும் அதே தவறை செய்யத் துணிவான் 

உயிர் மேல் ஆசை இல்லாத ஒரு மனிதனை பார்க்க முடியாது இதுபோன்ற தண்டனைகளை மற்றவர்கள் பார்த்தல் தாமும்  இதுபோல் செய்தால் தமக்கும் இதே தண்டனைதான் நமது உயிரையும் அரசாங்கம் எடுத்துவிடும் என்று அஞ்சினால் எப்படி ஒருவன் திருடுவான் கொள்ளையடிப்பான் கொலை செய்வான் திருடிய இரண்டுபேரைப் பிடித்து கையை மணிக்கட்டு வரை எடுத்துவிட்டால் அதை அனைவரிடமும் காட்டினால் எவனும் அதற்குப் பிறகு கனவிலாவது திருட நினைப்பானா ஆகா  திருடினால் இனிமேல் நமக்கு அரசாங்கம் இலவசமாக சோறுபோடாது நமது கையை எடுத்து நம்மை ஊனமாக்கிவிடும் அப்படி ஊனமாகிப்போனால் அதன்பிறகு நமது நிலை என்ன என்று ஒருவன் எண்ணினால் பிறகு எப்படி திருடுவான் அப்படி திருடர்களும் கொள்ளைக்காரர்களும் பொறுக்கிகளும் பயந்து திருந்தினால் அது நிச்சயம் ஒவ்வொரு குடிமகனுக்கும் நன்மை பயக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படுவது உறுதி. எந்த அளவிற்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனிலுள்ள) 'ஸன்ஆவிலிருந்து 'ஹள்ரமவ்த்' வரை பயணம் செல்வார். (வழியில்) அல்லாஹ்வையும் தவிர வேறெதற்கும் (வேறெவருக்கும்) அவர் அஞ்சமாட்டார். புகாரி6943

உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப் பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள், அல்குர்ஆன் 5.45

அறிவுடையோரே! பழிக்குப் பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது. அல்குர்ஆன் 2.197 
 
முஹம்மது உபைஸ்

இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் ஒரு பார்வை


"இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் மிகவும் கொடூரமானவை; மனிதாபிமான மற்றவை'' என்று பரவலாக விமர்சிக்கின்றனர். குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகளை இஸ்லாம் வழங்குவதே இதற்குக் காரணம்.

ஆனால் இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் தாம் மனித குலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் சட்டங்கள் என்பதை நடுநிலையோடு சிந்திக்கின்ற யாரும் புரிந்து கொள்வார்கள்.

குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்று விதி ஏற்படுத்தப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் தான் இந்த விஷயத்தில் நாம் சரியான முடிவுக்கு வர முடியும்.

கொலையாளிகளைக் கொல்வதால் கொல்லப்பட்டவனின் உயிர் திரும்பக் கிடைத்து விடப்போவதில்லை; கற்பழித்தவனுக்கு மரண தண்டனை வழங்குவதால் போன கற்பு திரும்ப வரப்போவதில்லை; பொருளாதாரம் சம்பந்தப்பட்ட திருட்டு போன்ற சில குற்றங்களில் வேண்டுமானால் பறி போனவை சில சமயங்களில் கிடைக்கலாமே தவிர பெரும்பாலான குற்றங்களில் குற்றவாளி தண்டிக்கப்பட்டு விடுவதால் அவனால் பாதிக்கப்பட்டவனுக்குப் பயனேதும் கிடையாது.



இழந்ததை மீட்பது தண்டனைகளின் நோக்கம் அல்ல என்பதை இதிலிருந்து விளங்கலாம். அப்படியானால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டிய காரணம் என்ன?

1. குற்றம் செய்தவனுக்கு வழங்கப்படும் தண்டனை, மீண்டும் மீண்டும் குற்றம் செய்வதிலிருந்து அவனைத் தடுக்க வேண்டும்.
2. ஒரு குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனையைக் கண்டு மற்றவர்கள் குற்றம் செய்ய அஞ்ச வேண்டும்.

3. குற்றவாளியால் பாதிப்புக்கு உள்ளா னவன் தனக்கு நீதி கிடைத்து விட்டதாக நம்ப வேண்டும். மன நிறைவு அடைய வேண்டும்.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட இந்த மூன்றைத் தவிர வேறு காரணங்கள் இருக்க முடியாது.

குற்றம் செய்தவர்கள் மீண்டும் குற்றம் செய்யாமலும், குற்றம் செய்ய நினைப்பவர்கள் அதன் பால் நெருங்காமலும் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் உலகமெங்கும் சிறைச் சாலைகள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குற்றவாளிகளுக்கு எந்த விதமான தண்டனையும் வழங்கக் கூடாது என்று உலகில் எந்த அரசாங்கமும் கூறுவதில்லை.

ஆனால் உலக நாடுகள் பலவற்றில் இயற்றப்பட்டுள்ள குற்றவியல் சட்டங்களால் குற்றங்களைக் குறைக்க இயலவில்லை.
அது மட்டுமின்றி குற்றவாளிகளுக்கு சிறைச் சாலைகளில் செய்து தரப்படுகின்ற வசதிகள் குற்றங்களை அதிகப்படுத்தவே வழி வகுக்கின்றன.
குற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய சட்டங்களே குற்றம் செய்யத் தூண்டினால் என்னவாகும்?

திருட்டு, கற்பழிப்பு, கொலை, கொள்ளை, இன்ன பிற குற்றங்களில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு வழங்கப்படும் தண்டனை என்ன? சில மாதங்களோ, சில வருடங்களோ சிறைத் தண்டனை வழங்கப்படுகின்றது. பெரும் பாலான நாடுகளில் தண்டனையின் அளவு இது தான்.

சிறைத் தண்டனை என்பது என்ன? வெளியே வர முடியாது என்ற ஒரு அம்சத்தை நீக்கி விட்டுப் பார்த்தால் எத்தனையோ பரம ஏழைகளின் வாழ்வை விட சிறை வாழ்வு மேலானதாக உள்ளது.

நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்கும் ஏழைகளுக்கு அன்றாடம் கால் வயிற்றுக் கஞ்சிக்கே வழியில்லை. அநியாயமாகவும், அயோக்கியத் தனமாகவும் நடந்து கொண்ட குற்றவாளிகளுக்கு மூன்று வேளை உணவுக்கு உத்தரவாதம் தரப்படுகின்றது. உயர்தரமான மருத்துவ வசதிகள் அவர்களுக்குச் செய்து தரப்படுகின்றன. அவர்களின் பொழுதைப் போக்குவதற்காக (?) சினிமா போன்ற வசதிகளும் சிறைச் சாலைகளுக் குள்ளேயே செய்து தரப்படுகின்றன.

இந்தக் குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளை எதுவும் செய்து விடாத அளவுக்குப் பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் வேதனையான அம்சம் என்ன வென்றால், எந்த மக்களிடமிருந்து ஒருவன் திருடுகிறானோ, எந்த மக்களைக் கொலை செய்கிறானோ, எந்தப் பெண்களைக் கற்பழிக்கிறானோ, அந்த மக்களின் வரிப் பணத்திலிருந்து தான் இந்த அயோக்கியர்களுக்கு இவ்வளவு வசதிகளும் செய்து தரப்படுகின்றன.

இந்தப் பெயரளவிலான தண்டனை யால் ஒரு பயனும் ஏற்படாது; ஏற்படவில்லை.

53 முறை சிறை சென்றவர் மீண்டும் கைது!
15 முறை சைக்கிள் திருடியவன் மீண்டும் கைது!

என்றெல்லாம் அன்றாடம் செய்தித் தாள்களில் செய்திகள் வருகின்றன. 53 தடவை வழங்கப்பட்ட தண்டனைகள் அவனுக்கு எந்த அச்சத்தையும் ஏற்படுத்தவில்லை. அதை ஒரு தண்டனையாகவே அவன் கருதவில்லை.
சிறைச் சாலைகளில் கிடைக்கும் வசதிகள் பற்றி மற்றவர்களும் தெரிந்து கொண்டதால் "நேர்மையாக வாழ்ந்து கஞ்சிக்குக் கஷ்டப்படுவானேன்? ஏதேனும் குற்றம் புரிந்தால் சிறைச்சாலைகளில் மூன்று வேளை உணவு கிடைக்குமே'' என்றெண்ணி அவர்களும் குற்றங்களில் ஈடுபடத் தொடங்குகின்றனர்.

மேலும் குற்றவாளிகள் சிறைச் சாலைகளில் கூட்டாகத் திட்டமிடவும் வாய்ப்புக் கிடைப்பதால் மேலும் பெரிய அளவில் குற்றம் செய்வதற்கு புதுப்புது யுக்திகளை வகுக்கின்றனர்.

சிறைச் சாலைகள் குற்றவாளிகளின் பல்கலைக் கழகங்களாகத் திகழ்வதை அனைவரும் அறிவர்.ஆண்டு தோறும் குற்றவாளிகள் பெருகி வருகின்றார்கள்; குற்றங்கள் பெருகுகின்றன; குற்றவாளிகளை அதிகப்படுத்துவதற்காக மக்களின் வரிப் பணம் பாழாக்கப்படுகின்றது.
மனிதாபிமானச் (?) சட்டங்கள் ஏற்படுத்திய விளைவுகள் இவை.

பாதிக்கப்பட்டவன் இந்தத் தண்டனைகளால் மன நிறைவு அடைவானா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.திருட்டுக் கொடுத்தவனிடம் போய் திருடியவனை என்ன செய்யலாம் என்று கேட்டால் "ஆறு மாதம் சோறு போடலாம்'' எனக் கூற மாட்டான். கொல்லப்பட்டவனின் மகனிடம் போய் கொலையாளியை என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டால் "பதினான்கு வருடம் அரசாங்கச் செலவில் அவனைப் பராமரிக்க வேண்டும்'' என்று கூறுவானா? தலையைச் சீவ வேண்டும் என்பானா?

கற்பழிக்கப்பட்டவள், அதனால் தனது எதிர்காலமே இருண்டு விட்ட நிலையில் கற்பழித்தவனுக்கு எத்தகைய தண்டனை கொடுத்தால் மனம் நிறைவடைவாள்? என்றெல்லாம் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளைச் சீர்தூக்கிப் பார்த்து தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து பார்க்காமல் பாதிக்கப்படாத இடத்தில் அமர்ந்து கொண்டு சட்டங்கள் இயற்றப்படுவதால் தான் பாதிக்கப்பட்டவனின் உணர்வுகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இஸ்லாமோ இதைக் கவனத்தில் கொள்கிறது.

ஒருவன் பத்துப் பேரை கொலை செய்து தூக்குத் தண்டனை பெறுகிறான். அவனது தண்டனையைக் கருணை மனுவின் அடிப்படையில் ரத்துச் செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது உலகின் பல நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.

கொல்லப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாமனோ, மச்சானோ அல்ல என்றாலும் அந்த அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்டிருப்பதிலிருந்து பாதிக்கப்பட்டவனின் நிலையைச் சட்டம் கடுகளவும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாமியச் சட்டம் என்ன கூறுகிறது? ஒருவன் மற்றொருவனின் கண்ணைக் குருடாக்கி விட்டால், இஸ்லாத்தில் இதற்கான தண்டனை குற்றவாளியின் கண்ணையும் குருடாக்கி விட வேண்டும். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பது இஸ்லாத்தின் குற்றவியல் சட்டம்.

கண்ணை இழந்தவன் குற்ற வாளியை மன்னித்து விட்டால் குற்றவாளி தண்டிக்கப்பட மாட்டான். அல்லது குற்றவாளியிடம் இழப்பீட்டைக் கோரிப் பெற்றுக் கொண்டாலும் குற்றவாளி தண்டிக்கப்பட மாட்டான்.
அது போலவே கொல்லப்பட்டவரின் வாரிசுகளில் யாரேனும் ஒருவர் குற்றவாளியின் உயிரை எடுக்க வேண்டாம் என்று கூறினால் கூட குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படாது. இது இஸ்லாமியச் சட்டம்.

அதாவது உலக நாடுகள் குடியரசுத் தலைவருக்கு வழங்கிய அதிகாரத்தை பாதிக்கப்பட்டவனுக்கு இஸ்லாம் அளிக்கிறது. சட்டங்கள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்பதை நியாயமான சிந்தனையுடைய யாரும் மறுக்க முடியாது. பாதிக்கப்பட்டவன் மன நிறைவு பெறும் வகையில் தண்டனை அளிக்கப்படா விட்டால் பாதிக்கப்பட்டவனே குற்றவாளி யாகும் நிலைமையும் உருவாகும்.

கொலைக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டவன் ஜாமீனில் விடப்படும் போதும், சிறைச் சாலையிலிருந்து நீதி மன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் போதும் கொல்லப்பட்டவனின் உறவினர்கள் அவனைக் கொன்று விடுவது அன்றாட நிகழ்ச்சியாகி வருகிறது.

இந்த நிலைமைக்கு என்ன காரணம்? "கொலையாளியை இந்தச் சட்டங்கள் தண்டிக்காது. தண்டித்தாலும் அது போதுமானதாக இருக்காது'' என்ற எண்ணத்தின் காரணமாகவே கொலை செய்யப்பட்டவனின் உறவினர்களும் கொலையாளிகளாகி விடுகின்றனர். குற்றங்கள் அதிகரிப்பதற்கு இதுவும் முக்கியக் காரணமாக உள்ளது எனலாம்.இனி இஸ்லாமியச் சட்டம் எவ்வளவு அர்த்தமுள்ளது; அறிவுப்பூர்வமானது என்பதைக் காண்போம்.

திருட்டுக் குற்றத்தில் ஈடுபடும் ஆண்கள், பெண்கள் ஆகியோரின் வலது கை மணிக்கட்டு வரை வெட்டப்பட வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.இப்படிக் கையை வெட்டினால் அவன் தொடர்ந்து திருட மாட்டான்; திருடவும் முடியாது.

மீண்டும் திருடுவதற்கு மனதாலும் எண்ண மாட்டான் என்பது ஒரு நன்மை.முதன் முதலாகத் திருட எண்ணுபவ னும் அதற்குக் கிடைக்கும் தண்டனையை அறியும் போது திருடத் துணிவு பெற மாட்டான். இது மற்றொரு நன்மை.

கை வெட்டப்பட்டவனைப் பார்க்கும் போது அவன் திருடன் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள இயலும். எனவே அவனிடம் தங்கள் பொருட்களைப் பறிகொடுக்காமல் எச்சரிக்கையாக இருந்து கொள்ளலாம்.

"இவர்கள் இங்கே இருக்கிறார்களா?'' என்று திருடர்களின் புகைப் படங்களைப் பொது இடங்களில் ஒட்டி வைப்பதால் அந்த முகங்களை யாரும் நினைவில் பதிய வைக்க இயலாது. ஆனால் கையை வெட்டினால் அதுவே திருடன் என்பதற்குச் சிறந்த அடையாள மாகி விடுகிறது. இது மூன்றாவது நன்மை.

தண்டனைகள் வழங்கப்படுவதன் நோக்கம் பரிபூரணமாக இப்போது நிறைவேறுகிறது. அது மட்டுமின்றி குற்றவாளியை வருடக் கணக்கில் சிறையில் போட்டு அவனைப் பராமரித்துப் பாதுகாக்கும் வகையில் ஏற்படும் பொருளாதாரச் செலவுகள் மிச்சமாகின்றன. மக்களின் வரிப் பணம் பாழாகாமல் இந்தச் சட்டம் தடுக்கின்றது. சிறைக் கூடங்களை ஒழித்து விட்டு இஸ்லாம் பரிந்துரைக்கின்ற தண்டனைகளை அமுல்படுத்தினால் பற்றாக்குறை பட்ஜெட் போடும் அவசியம் இராது.
"பாவம்! கையை வெட்டுகின்றீர்களே!'' என்று பரிதாபப்படுவது தான் மனிதாபிமானம் என்று சிலர் எண்ணுகின்றனர்.

மரணப் படுக்கையில் கிடக்கும் தன் மனைவியின் உயிர் காக்கும் மருந்தை வாங்கச் செல்லும் ஒருவனிடமிருந்து திருடன் பணத்தைப் பறித்துக் கொள்கிறான். பணத்தை மட்டுமின்றி தன் மனைவியின் உயிரையும் பறிகொடுத்து நிற்கிறானே! அவனுக்காக யார் பரிதாபப்படுவது?

நேர்மையையும், ஒழுக்கத்தையும் விரும்பக் கூடியவன் பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்பதைப் பார்த்து பரிதாபப்படாமல், அவனை நடுத் தெருவில் நிறுத்திய அயோக்கிய னுக்காகப் பரிதாபப்படுகிறார்கள்.

இப்படியே கையை வெட்டிக் கொண்டே போனால் கையில்லாதவர்களின் எண்ணிக்கை பெருகி விடுமே என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
நிச்சயமாக கையில்லாதவர்களின் எண்ணிக்கை பெருகாது. ஒரே ஒரு திருடனின் கையை வெட்டி விட்டால் மற்ற எவனுக்குமே திருடும் துணிவு ஏற்படாது; வெட்டப்படும் கைகளின் எண்ணிக்கை நிச்சயம் பெருகாது.

உதாரணத்துக்காகத் தான் திருட்டுக் குற்றத்தின் தண்டனை பற்றி இங்கே குறிப்பிட்டுள்ளோம். இஸ்லாம் கூறும் தண்டனை முறைகள் யாவுமே இவ்வாறு தான் அமைந்துள்ளன.

கொலை செய்தவனை அரசாங்கம் உடனே கொன்று விடுமானால் கொலை செய்ய எவருமே துணிய மாட்டார்கள். பல்லை உடைத்தால் தனது பல்லும் அரசாங்கத்தினால் உடைக்கப்படும் என்பதை அறிந்தால் எவருமே அடுத்தவனின் பல்லை உடைக்க மாட்டார்கள்.

உலகில் எத்தனையோ அரசுகள் வந்து போய் விட்டன. மக்களின் உயிருக்கும், உடமைக்கும், கற்புக்கும் பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பில் அத்தனை அரசுகளுமே தோல்வியைத் தான் தழுவி இருக்கின்றன. எப்போது என்ன நேருமோ என்று அஞ்சியே மக்கள் வாழும் நிலை ஏற்பட்டு விட்டது.

இந்த நிலை மாற வேண்டுமானால் குற்றவாளிகள் விஷயத்தில் கருணை என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது. இஸ்லாம் சொல்கின்றது என்ற குறுகிய நோக்கில் இஸ்லாமியத் தண்டனைகளைப் புறக்கணிக்காமல் அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளைக் கருத்தில் கொண்டு அதை அமுல்படுத்த முன் வர வேண்டும்.
குற்றவாளிகளுக்கு ஒத்தடம் கொடுக்கும் தண்டனைகளை மாற்றி அவர்களுக்கெதிராகச் சாட்டையை உயர்த்தி, கடும் தண்டனைகளை நடைமுறைப்படுத்தினால் உலகம் அமைதிப் பூங்காவாகத் திகழும்.

திருடனைப் பிடித்தவுடன் அவன் கையை வெட்டி விட்டால் பிறகு அவன் நிரபராதி என்பது தெரிய வந்தால் போன கை திரும்பி வந்து விடுமா? என்றெல்லாம் சிலர் கேட்கின்றனர்.

இரண்டு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற பின் எத்தனையோ பேர் நிரபராதிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இழந்த மூன்றாண்டுகளைத் திருப்பிக் கொடுக்க இயலுமா என்று கேட்டால் அதற்கு என்ன பதில்? என்பதைச் சிந்தித்தால் இப்படிக் கேட்க மாட்டார்கள்.
மேலும் "எடுத்தேன்; கவிழ்த்தேன்'' என்று தண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறவில்லை. குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட பின்பே தண்டனை வழங்குமாறு கூறுகின்றது.

மரண தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் விபச்சாரத்தை நான்கு நேரடியான சாட்சிகள் மூலம் நிரூபிக்க வேண்டும். நான்குக்கும் குறைவானவர்கள் இக்குற்றத்தைச் சுமத்தினால் அவ்வாறு குற்றம் சுமத்தியவர்களுக்கு எண்பது கசையடிகள் வழங்குமாறு இஸ்லாம் உத்தரவிடுகிறது.(பார்க்க: திருக்குர்ஆன் 24:4, 24:13)

இஸ்லாமிய ஆட்சி முறையில் தகுந்த சாட்சியங்களின்றி சில குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ள முடியுமே தவிர நிரபராதிகள் தண்டிக்கப்படவே முடியாது என்பது தான் உண்மை.(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:178-179; 5:33; 5:38; 5:45; 17:33; 24:2; 24:4)