Pages

கற்பழிப்புக்கு கடும் தண்டனை


கற்பழிக்கும் மட்டுமின்றி எல்லாக் குற்றங்களுக்கும் கடும் தண்டனை வழங்க வேண்டும் என்பது இஸ்லாமியக் குற்றவியல் சட்டத்தின் முக்கிய அம்சம்.

இது அனைவரின் மனசாட்சிக்கும் சரியாகத் தெரிந்தாலும் காழ்ப்புணர்வு காரணமாக இதை வெளிப்படையாகச் சொல்வதில்லை.
நாட்டையே உலுக்கும் சம்பவங்கள் நடந்தால் மட்டும் இது பற்றி பேசி விட்டு சகஜ நிலை வந்ததும் குற்றவாளிகளுக்கு கருணை காட்டும் வகையில் நடந்து கொள்கின்றனர். அது போல் தேசிய மகளிர் ஆணையத் தலைவிக்கும் நினைவு வந்து கற்பழிப்புக்கு கடும் தண்டனை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தினமணியில் வெளியான செய்தி

புதுதில்லிஜன. 13:  பெண்களிடம் கற்பழிப்பு போன்ற  பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு மிகக் கடுமையான தண்டன வழங்கிட சட்டத்தில் தக்க மாற்றம் கொண்டு வரப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் தேசிய மகளிர் ஆணைய தலைவர் கிரிஜா வியாஸ்.

 மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை புதன்கிழமை சந்தித்து இந்த கோரிக்கையை வைத்தார்.

19 ஆண்டுகளுக்கு முன் 14 வயது ருசிகா என்ற சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எதிரொலியாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவர்கள் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அரசு ஊழியர்களாக இருந்தால் தண்டனையை இன்னும் கடுமையாக்க வேண்டும் என்றும் அவர் அமைச்சரிடம் யோசனை தெரிவித்தார்.

அமைச்சரை சந்தித்த பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பெண்கள் மீதான பாலியல் குற்றச் செயல்கள் தொடர்பான சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவது மிக மிக அவசியம். பாலியல் குற்றச்செயல்கள் தொடர்பான விளக்கத்தை விரிவுபடுத்தி குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும தண்டனையை அதிகரிக்கவேண்டும். தற்போது உள்ள சட்ட விதிகள்படி பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க முடியும். இத்தகைய குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சம் ஆயுள் அல்லது ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்து சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப் படவேண்டும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் அரசு ஊழியர்களாக இருந்தால் அவர்களுக்கு தண்டனையை மேலும் கடுமையாக்க வழி செய்தாகவேண்டும் என்று அமைச்சரிடம் வலியுறுத்தினேன்.

பாலியல் வன்முறை தொடர்பான சட்டங்கள் குறித்து மத்திய உள்துறைச் செயலர் தலைமையில் மத்தியமாநில அரசுகளின் காவல்துறை  அமைச்சகங்களின் ஒருங்கிணைப்புக் குழு ஆராய்ந்து வருகிறது என்று சிதம்பரம் உறுதி அளித்தார். பெரும்பாலான கற்பழிப்பு வழக்குகளில் புகாரே பதிவு செய்யப்படுவதில்லை என்பது வேதனை தரும் விஷயம் என்றார் வியாஸ்.


onlinepj.com

No comments:

Post a Comment