Pages

கசாபுக்கு தூக்கு ஓகே - மோடிக்கு ??


டெல்லி: மும்பையில் 2008ம் ஆண்டு நடந்த பயங்கர தீவிரவாத தாக்குதல் வழக்கில் தனக்கு மும்பை தனி நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனையை உறுதி செய்து மும்பை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து பாகிஸ்தான் தீவிரவாதி முகம்மது அஜ்மல் கசாப் தாக்கல் செய்த அப்பீல் மனு மீதான தீர்ப்பை இன்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. கசாப்பின் அப்பீல் மனுவை டிஸ்மிஸ் செய்த உச்சநீதிமன்றம் அவனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையையும் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் கசாப் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இதில் 2010ம் ஆண்டு மே 6ம் தேதி மும்பை தனி நீதிமன்றம் கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை பின்னர் பாம்பே உயர்நீதிமன்றம் 2011, அக்டோபர் 10ம் தேதி உறுதி செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தான் கசாப். அதில் தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைக் குறைத்து ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு கோரியிருந்தான்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பை அளித்தது உச்சநீதிமன்றம். முன்னதாக கசாப்புக்காக வாதாட உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அமைக்கல் கியூரியான ராஜு ராமச்சந்திரன் உச்சநீதி்மன்றத்தில்நடந்த வாதத்தின்போது கூறுகையில், நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போர்தான் மும்பையில் நடந்த தாக்குதல். ஆனால் அந்த மாபெரும் சதித் திட்டத்தை உருவாக்கிய குழுவில் கசாப் இடம் பெறவில்லை. அதில் அவன் ஒரு அங்கமாக இல்லை என்று கூறியிருந்தார்.
ஆனால் மகாராஷ்டிர மாநில அரசு சார்பில் ஆஜரான கோபால் சுப்ரமணியம் வாதிடுகையில், நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போரில் முக்கியப் பங்காற்றியுள்ளான் கசாப். எனவே அவனை தூக்கில் தொங்க விடுவதே சரியானதாக இருக்க முடியும் என்று வாதிட்டிருந்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பை அளித்த உசத்சநீதிமன்றம், கசாப்பின் மேல் முறையீட்டு மனுவை டிஸ்மிஸ் செய்து, அவனுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகளையும் உறுதி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து அவனைத் தூக்கிலிட நாள் குறிக்கப்படும். இருப்பினும் கசாப் சார்பில் குடியரசுத் தலைவரிடம் கருணை கோரி மனு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கருணை மனு மீது முடிவு வர வருடக்கணக்கில் ஆகும் என்பதால் கசாப் இப்போதைக்கு தூக்கிலிடப்படும் வாய்ப்பு மிக மிகக் குறைவே.
கசாப் தவறு செய்திருந்தால் அவனை தூக்கிலிடுவதை எந்த முஸ்லிமும் எதிர்க்க மாட்டான். அதே சமயம் ... முஸ்லிம்களை துரத்தி துரத்தி கருவறுத்த நரேந்தர மோடியை தண்டிக்க திராணியில்லாத இந்திய அரசு இதற்க்கு பதில் சொல்ல வேண்டும்.
படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்கள் இந்தியர்கள் இல்லையா ?
//கசாபுக்கு பிரியாணி கொடுத்ததுபோதும், உடனே தூக்கிலிடுங்கள்: பாஜக//

பல பேரை கொன்று குவித்த நரபலி மோடிக்கு முதலமைச்சர் பதவி கொடுத்தது போதும், அவனை எப்ப தூக்கிலிடப் போறீங்க..........?????
 


No comments:

Post a Comment